Thursday 28 September 2017

கடல் மணலோடு ..விளையாடுவோம் சங்குத்துறை கடலோரம்- a Walk to Sanguthurai Beach

ஒரு மாலை நேரம் -  சங்குத்துறை கடலோரம்.

Sanguthurai Beach- a View

Sanguthurai Beach Entrance

         கடல் சூழ் கன்னியா குமரி மாவட்டத்தின் எழில் மிக்க சுற்றுலா இடங்களில் கடற்கரைகள் ரம்மியானவை, அவற்றில் அமைதியான, அநேகம் தெரியாத சங்குத்துறை கடற்கரைக்கு பயணம் செய்து மணலோடு விளையாடிய பதிவு இன்று இடம் பெறுகிறது.

         குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலில் இருந்து பீச் ரோடு சாலை வழியே மேல கிருஷ்ணன் புதூர் என்ற சிற்றூர் கடந்து நேரே சென்றால் (சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் ), இவ்வெழில் கொஞ்சும் கடற்கரை. பெயருக்கு ஏற்றார் போல் வன் (பிரம்மாண்ட)  சங்கு கடற்கரையோரம் நிறுவப்பட்டுள்ளது. இரு நிழற்குடைகள் கடல் தாவரங்கள், விளையாடி மகிழ தங்கத்துகள் மணல் வெளி நண்டுகள் , ஓயாமல் நம்மோடு பேசிக்கொண்டிருக்கும்  கடல்,  என்று நம் மனதை வசீகரிக்கும் அம்சங்கள் கொண்டது.



A nature Scene from Sanguthurai Beach



A  Sandy from Sanguthurai Beach


 Sanguthurai Beach



       உங்களது பொழுது போக்கை தீர்மானித்து செல்லலாம், மாலை வேளையில் ஒரு கடல் அலை கால் நனைக்க நீண்ட நடை சென்று வரலாம், சனி, ஞாயிறு, மற்றும் விடுமுறை நாட்கள் தவிர, இங்கு மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும், பகல் நேரங்கள் அமைதியாய் கடலில் போக்கலாம், தின்பண்ட கடைகளும் மிக மிக குறைவே, அதனால் வரும்போதே பண்டங்கள் வாங்கி வருவது நலம், உங்கள் குழந்தைகளோடு இங்கு வந்து கடல் மணலில் வீடுகள் கட்டியும், தொட்டு விளையாடியும், ஆடி ஓடி நடக்கலாம், கடலில் குளிக்கையில் அதி கவனம் வேண்டும், அடிக்கடி வலைப்பூவில் அறிவுறுத்துவோம், அரபிக்கடல் சுருட்டும் அலையும்,  ஆழமும் கொண்டது, எனவே எச்சரிக்கையோடு  கடலில் குளிப்பது நல்லது, 

A Enjoyable Moment






A Enjoyable Moment




















Time for Selfie 




a Reality Photographer



on a Fishing Catamaran


A Church








Sandy Walk

மணலோடு நீண்ட நடை போட்டு, கடலை நன்றாக ரசித்து, செல்பி படங்கள் எடுத்து மனநிறைவோடு, மகிழ்வோடு விடை கொடுக்கலாம், வருகையில் அலைபேசி, காட்சிப்பேழை (கேமரா) எடுத்து வந்தால் என்றும் மறக்க இயலா ஒரு அனுபவத்தை சங்குத்துறை வழங்கும் என்பதில் சந்தேகமே இல்லை..


பயணம் தொடரும் ...

நேசமுடன் 
இளங்கோ கண்ணன் 

சங்குத்துறை கடற்கரை செல்ல பேரூந்துகள்.

கன்னியாகுமரி ===> நாகர்கோவில் 
36 பள்ளம், 37 கேசவன் புத்தன் துறை, மற்றும் மேல கிருஷ்ணன் புதூர் செல்லும் அனைத்து பேரூந்துகள், பின்னர் அங்கிருந்து வாடகை வாகனங்கள் மூலம் பயணிக்கலாம்..